[X] Close

இந்தியர்கள் முதலீடு செய்வதில் லண்டனுக்கு முதலிடம்


  • kamadenu
  • Posted: 04 May, 2019 07:48 am
  • அ+ அ-

இந்தியர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதில் லண்டன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அதிக முதலீடு இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் லண்டன் முன்னிலையில் உள்ளது. 2017-ல் லண்டனில் இந்தியர்கள் செய்த முதலீடுகளைக் காட்டிலும் 2018-ல் 255 சதவீதம் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். அதேபோல் இந்தியாவுக்குள் செய்யப்படும் இங்கிலாந்து முதலீடுகள் 100 சதவீதம் உயர்ந்துள்ளன. லண்டனில் 52 திட்டங்களில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ளனர். அமெரிக்காவில் 51 திட்டங்களிலும், ஐக்கிய அரபு நாடுகளில் 32 திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளனர். இந்தியா, இங்கிலாந்து இரண்டு நாடுகளும் தொழில்நுட்பம், நிதி சேவைகள் ஆகியவற்றில் உள்ள நுணுக்கங்களையும், வாய்ப்புகளையும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close