[X] Close

எம்ஆர்எப் லாபம் ரூ. 294 கோடி


294

  • kamadenu
  • Posted: 03 May, 2019 08:00 am
  • அ+ அ-

டயர் உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் எம்ஆர்எப் நிறுவனம் மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 293.83 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டியதைக் காட்டிலும் 15 சதவீதம் குறைவாகும். முந்தைய ஆண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 345.32 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் வருமானம் ரூ. 3,835 கோடியிலிருந்து ரூ. 4,073 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் (2018-19) நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் ரூ. 1,096 கோடியாகும். முந்தைய ஆண்டு இது ரூ. 1,092 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வருமானம் ரூ. 15,837 கோடியாகும். முந்தைய ஆண்டு இது ரூ. 15,181 கோடியாக இருந்தது.

ஒரு பங்குக்கு ரூ. 54 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது. ஏற்கெனவே இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ. 3 வழங்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close