[X] Close

ஐஎல் அண்ட் எஃப்எஸ் கடன்களை வாராக்கடனாக அறிவிக்க அனுமதி: தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் தகவல்


  • kamadenu
  • Posted: 03 May, 2019 07:54 am
  • அ+ அ-

ஐஎல் அண்ட் எஃப்எஸ் குழும நிறுவனங்களின் கடன் கணக்கு களை வாராக்கடன்களாக அறிவிக்க வங்கிகளுக்கு தேசிய நிறு வனங் கள் சட்ட தீர்ப்பாயம் அனுமதி அளிப்பதாக தகவல் வெளியிட்டுள் ளது.

நாட்டின் மிகப்பெரிய உட்கட் டமைப்பு திட்டங்கள் மற்றும் அதற் கான நிதி சேவைகள் நிறுவனமான ஐஎல் அண்ட் எஃப்எஸ் குழுமம் சுமார் ரூ.91 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. இந்தக் கடன்கள் திருப் பிச் செலுத்த வேண்டிய கட்டத் தைத் தாண்டியதால் திவால் ஆகும் நிலைக்கு ஐஎல் அண்ட் எஃப்எஸ் ஆளானது. நிலைமை மோச மாவதற்குள் அரசே நேரடியாக தலையிட்டு நிர்வாகத்தை மாற்றி யமைத்து கடன் சீரமைப்பு நட வடிக்கைகளை எடுக்க உதய் கோடக் தலைமையில் குழுவை நியமித்தது. ஆனால், இதுவரை ஐஎல் அண்ட் எஃப்எஸ் விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் எட்டப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், தேசிய சட்ட நிறுவனங்கள் தீர்ப்பாயம் ஐஎல் அண்ட் எஃப்எஸ் குழும நிறுவனங் களின் கடன்களை வாராக்கடன் கணக்குகளாக அறிவிக்கும் அனு மதியை வங்கிகளுக்கு அளித்துள் ளது. கடந்த பிப்ரவரியில் தேசிய சட்ட நிறுவனங்கள் தீர்ப்பாயம் தங்களின் அனுமதி கிடைக்கும்வரை ஐஎல் அண்ட் எஃப்எஸ் கடன்களை வாராக்கடன்களாக அறிவிக்கக் கூடாது எனக் கூறியிருந்தது. பின்னர் ரிசர்வ் வங்கி தலையிட்டு, வங்கித் துறை விதிமுறைகளின்படி வங்கிகளுக்கு இந்த அனுமதியை வழங்க வேண்டுமென தீர்ப்பாயத் திடம் முறையிட்டது. இதை அடுத்தே தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐஎல் அண்ட் எஃப்எஸ் விவகாரத்தை விசாரித்து வந்த தலைமை நீதிபதி எஸ் ஜே முக்கோபாத்யாயா தலைமை யிலான அமர்வு இந்த அனு மதியை வழங்கியுள்ளது. இதன் படி ஐஎல் அண்ட் எஃப்எஸ் குழுமத் தின் 300-க்கும் மேலான துணை நிறுவனங்கள் திருப்பிச் செலுத் தாத கடன்கள் அனைத்தும் வாராக் கடன்களாக அறிவிக்கப்பட உள்ளன.

ஆனால், வாராக்கடன்களாக அறிவிக்கும் அனுமதி வங்கி களுக்கு வழங்கப்பட்டாலும், திவால் நடைமுறைகளைச் செயல்படுத் தவோ, கடன் மீட்பு நடவடிக்கை களை எடுக்கவோ அனுமதி வழங்கப் படவில்லை என நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close