[X] Close

நீரவ் மோடி ஜாமீன் மனு தாக்கல்


  • kamadenu
  • Posted: 02 May, 2019 08:48 am
  • அ+ அ-

பஞ்சாப் நேஷனல் வங்கியில் தில்லுமுல்லு செய்து நாட்டை விட்டு ஓடி லண்டனில் தஞ்சமடைந்த வைர வியாபாரி நீரவ் மோடி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தம்மை விடுவிக்கக் கோரி ஜாமீன் மனுவை அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை இம்மாதம் 8-ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும்.

ஏற்கெனவே இரண்டு முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்நிலையில் மூன்றாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார் நீரவ் மோடி. நீரவ் மோடி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இவர் கடந்த மார்ச் 19-ம் தேதி லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அப்போதிலிருந்து வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக இந்திய அதிகாரிகள் தரப்பில் சட்ட ஆலோசனை நிறுவனம் கிரவுன் பிராசிகியூஷன் சர்வீஸ் நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை (ஏப்ரல் 26) இந்த வழக்கு விசாரணை காணொளி மூலம் நடத்தப்பட்டது. சிறைச்சாலையில் இருந்த நீரவ் மோடியை நீதிபதிகள் கேள்வி கேட்டனர். பின்னர் அவரது நீதிமன்றக் காவலை மே 24 வரை நீட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close