[X] Close

அடுத்த 6 மாதங்கள் நிதித் துறைக்கு நெருக்கடியான காலம்: மஹிந்திரா வங்கி துணைத் தலைவர் உதய் கோடக் கருத்து


6

  • kamadenu
  • Posted: 02 May, 2019 08:49 am
  • அ+ அ-

நிதித் துறைக்கு அடுத்த ஆறு மாதங்கள் மிகவும் நெருக்கடியான காலமாக இருக்கும் என கோடக் மஹிந்திரா வங்கியின் துணைத் தலைவர் உதய் கோடக் தெரிவித்துள்ளார்.

நிதித் துறை ஏற்கெனவே நெருக்கடியான கட்டத்தில்தான் உள்ளது. யெஸ் வங்கி சமீபத்தில் அதன் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடன்கள் வாராக்கடன்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்தது. பல வங்கிகளின் நான்காம் காலாண்டு முடிவுகள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இல்லை. நிதித் துறை மட்டும் நெருக்கடியில் இல்லை, அது சார்ந்த துறைகளும் நெருக்கடியில் உள்ளன.

இந்த நெருக்கடியான நிலை மேலும் 6 மாதங்கள் அதாவது இரண்டு காலாண்டுகளுக்கு இருக்கும். இந்த நெருக்கடி காலத்தை சமாளித்து மீண்டுவர இப்போதைய தேவை அனைத்து நிதி நிறுவனங்களும் தங்களுடைய நிதி அறிக்கைகளை சமநிலையாக வைத்துக்கொள்ள வேண்டும். லாபம் ஈட்டும் நடவடிக்கைகளைக் காட்டிலும் இப்போது விவேகமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றார். வங்கிகள் தற்போது வாராக்கடன் நெருக்கடிகளிலிருந்து வெளிவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதும் நிதித் துறைக்கு சவாலானதாக மாறியிருக்கிறது.

ஆனால், இந்த வலியைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். நீண்டகால நன்மைக்கு இந்த நெருக்கடி காலத்தைச் சமாளித்து மீண்டு வர வேண்டியது நிதித் துறையின் எதிர்காலத்துக்கு நல்லது என்று அவர் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close