[X] Close

500 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு விஸ்தாராவில் வேலை


500

  • kamadenu
  • Posted: 01 May, 2019 08:48 am
  • அ+ அ-

நிதி நெருக்கடியில் முடக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 500 பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளது விஸ்தாரா நிறுவனம். இவர்களில் 100 பேர் பைலட்டுகளாவர். மும்பை மற்றும் குருகிராமில் நடைபெற்ற நேர்முகத் தேர்வு மூலம் 500 பேர் தேர்வு செய்யப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாடா நிறுவனமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸும் கூட்டாக ஏற்படுத்திய நிறுவனம்தான் விஸ்தாரா. இந்நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு முன் தனது செயல்பாட்டைத் தொடங்கியது. தற்போதுதான் மிகப்பெரும் எண்ணிக்கையில் பணியாளர்களை இந்நிறுவனம் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே பயிற்சி பெற்ற தகுதி படைத்த பைலட்டுகள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் கேபின் பணியாளர்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதன் மூலம் அவர்களுக்கு மேலும் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட சுமைகள் குறைந்துள்ளன. இவர்களை நேரடியாகவே பணியில் ஈடுபடுத்த முடியும் என்று விஸ்தாரா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

விஸ்தாரா நிறுவனம் தற்போது உள்நாட்டு சேவையில் ஈடுபட்டு வருகிறது. விரைவிலேயே இந்நிறுவனம் வெளிநாட்டு சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close