[X] Close

லாபம் ஈட்டும் ஐஎம்பிசிஎல் நிறுவனத்தை தனியாருக்கு விற்க முயற்சிப்பது ஏன்?- மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


  • kamadenu
  • Posted: 30 Apr, 2019 08:03 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

மத்திய அரசுக்கு சொந்தமாக உத் தராகன்ட் மாநிலத்தில் செயல்படும் இந்தியன் மெடிசின்ஸ் பார்மசூடிக் கல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறு வனத்தின் பங்குகளை விற்க முயற் சிப்பது ஏன் என்று உத்தராகன்ட் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது. இது தொடர்பாக விரிவான விளக்கத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று நீதிபதி அலோக் சிங் உத்தரவிட்டுள்ளார்.

ஐஎம்பிசிஎல் நிறுவனத்தின் பங்கு விலக்கல் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐஎம்பிசிஎல் நிறுவன ஊழியர்கள் சங்கம் நீதிமன்றத்தில் மனு தாக் கல் செய்திருந்தது. இதை சங்கத் தின் செயலர் ஜெய்பால் சிங் ரவாத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் ஊழியர்கள் கடுமையாக உழைத்து நிறுவனத்தை லாபம் ஈட் டும் வகையில் முன்னேற்றியுள் ளனர். இந்த சமயத்தில் இந்நிறு வனத்தை தனியாருக்கு விற்பதற் காக மேற்கொள்ளப்படும் பங்கு விலக்கல் நடவடிக்கையானது சட்ட விரோதமானது. இந்த முறையற்ற செயலுக்கு தடை விதிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிறுவனத்தை தனியாருக்கு விற்பதன் மூலம் இதன் சேவைகள் பாதிப்புக்குள்ளாகும் என்றும் இதை விற்பதற்கான முடிவின் பின்னணி காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்நிறுவனம் பின்தங்கிய பகுதியில் தொடங்கப்பட்டுள் ளது. இப்பகுதியில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப் பட்ட இந்த நிறுவனத்தை தற்போது தனியாருக்கு விற்பதற்கான நட வடிக்கை எடுப்பதன் பின்னணியை அரசு விளக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறு வனத்தின் பங்குகளை அரசு விற்காத நிலையில் ஐஎம்பிசிஎல் நிறுவனத்தை மட்டும் தனி யாருக்கு விற்க முயற்சிப்பதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close