[X] Close

2022-ல் 54.7 கிகாவாட் காற்றாலை மின் உற்பத்தி: ஃபிட்ச் தரச் சான்று அமைப்பு தகவல்


2022-54-7

  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 08:27 am
  • அ+ அ-

இந்தியா 2022-ல் 54.7 கிகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திறனைப் பெற்றிருக்கும் என ஃபிட்ச் தரச்சான்று அமைப்பு தெரிவித்துள்ளது.

மின் ஆற்றலுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே இந்தியா 2022-ல் 175 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறனுடன் இருக்க வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் சூரியசக்தி மூலம் 100 கிகாவாட், காற்றாலை மூலம் 60 கிகாவாட் மற்றும் உயிரி ஆற்றல் மூலம் 10 கிகாவாட், நீர் ஆற்றல் மூலம் 5 கிகாவாட் பெற இலக்கு நிர்ணயித்தது. இதில் காற்றாலை மூலமான ஆற்றல் உற்பத்தியில் 2022-ல் இந்தியா 54.7 கிகாவாட் உற்பத்தி திறனுடன் இருக்கும் என ஃபிட்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மின் உற்பத்திக்கு பல்வேறு சவால்கள் உள்ளன. மின் உற்பத்தி திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல், அதற்கான முதலீடு மற்றும் செயல்திறன்மிக்க விநியோகம் என அனைத்தும் சவாலானது. ஆனாலும், இந்த சவால்களையெல்லாம் தாண்டி இந்தியா 2022-ல் காற்றாலை மின் உற்பத்தி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 60 கிகாவாட் மின் உற்பத்தியில் 54.7 கிகாவாட் திறனைப் பெற முடியும் என கூறியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close