[X] Close

மே 23-க்குள் வாராக்கடன் மீட்புக்கான புதிய விதிமுறைகள்: ரிசர்வ் வங்கி வெளியிட வாய்ப்பு


23

  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 08:28 am
  • அ+ அ-

வாராக்கடன்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மே 23-ம் தேதிக்குள் வெளியிடும் என தகவல் வெளியாகிஉள்ளது.

வங்கிகள் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் திவாலாகும் நிறுவனங்கள், தனிநபர்களிடமிருந்து வாராக்கடன்களை மீட்பதற்கான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மீது உச்ச நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியது. வாராக்கடன்கள் தொடர்பான ரிசர்வ் வங்கியின் பிப்ரவரி 12, 2018 சுற்றறிக்கையை ரத்து செய்தது.

அந்தச் சுற்றறிக்கையில் ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ள கடன்களில் 180 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படாவிட்டால் அதனை வாராக்கடனாக பாவித்து திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வாராக்கடன்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து புதிய மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகள் மே 23-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 23-ம் தேதி பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் வெளியிடப்படுவது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக இருக்குமா என்ற கேள்வியும் பலரிடம் எழுந்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close