[X] Close

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம்: எஸ்பிஐக்கு உத்தரவிட பிரதமரிடம் விமானிகள் கோரிக்கை


  • kamadenu
  • Posted: 29 Apr, 2019 08:21 am
  • அ+ அ-

நிதி நெருக்கடியினால் முடங்கிப் போயுள்ள ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் தேசிய விமானிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

கடன் சுமை, குத்தகை மற்றும் சம்பள பாக்கி போன்ற நிதிப் பிரச்சினைகள் காரணமாக விமான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி யுள்ளது ஜெட் ஏர்வேஸ். இதில் பணிபுரியும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியம் வழங்கப்படாததால் ஊழியர்கள் அனைவரும் போராடி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை ஜெட் ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரி வினய் துபே கூறுகையில், ‘‘ஊழியர்களுக்கான ஊதி யத்தை வழங்குவது குறித்து நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் எந்தவிதமான அறிகுறியும் தெரியவில்லை’’ என்று கூறினார்.

ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை தொடர்ந்து செயல்படுத்தவும், சம்பளம் வழங்கவும் அவசர நிதியாக ரூ. 983 கோடி கோரப்பட்டதை எஸ்பிஐ தலைமையி லான வங்கிகள் குழு வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து ஏப்ரல் 17 முதல் சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் சார்பாக தேசிய விமானிகள் சங்கம் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. தேசிய விமானிகள் சங்கத்தின் தலைவர் அதில் குறிப்பிட்டுள்ள தாவது,

“ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் அனைவருக் கும் ஒரு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட வேண்டு கிறோம். ஏனெனில், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் வீழ்ந்தபோது நடந்த துயரமான இழப்புகள் மீண்டும் நடப்பதை நாங்கள் பார்க்க விரும்ப வில்லை. மேலும், தற்போது பிற உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு குத்தகை விடப் படும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களை பதிவு நீக்கம் செய்வதை நிறுத்த வேண்டும்.

முக்கியமாக ஜெட் ஏர்வேஸின் ஏல நடை முறையை மிக விரைவில் நடத்த வேண்டும். அதன் மூலம் மட்டுமே ஜெட் ஏர்வேஸ் ஏர் லைன்ஸ் ஒரு நிறுவனம் என்ற மதிப்பைக் காப் பாற்ற முடியும். மேலும், ஏல நடைமுறையை தாமதப்படுத்தும் திட்டமிட்ட சதியோ, சட்ட விரோதமான நடவடிக்கைகளோ யாரேனும் எடுப்பதாக தெரிந்தால் அதை அரசு முன் கூட்டியே தடுத்திட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ரூ. 8,200 கோடி கடன் நிலுவை உள்ளது. எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் குழு ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை நரேஷ் கோயல் தலைமையிலான நிர்வாகத்திடமிருந்து கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close