[X] Close

ஜான்சன் & ஜான்சன் ஷாம்பு விற்பனைக்குத் தடை: மாநில அரசுகளுக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 28 Apr, 2019 09:28 am
  • அ+ அ-

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான ஷாம்புவை விற் கத் தடை விதிக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுகளுக்கு வலி யுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில செயலாளர்களுக் கும் கடிதம் அனுப்பியுள்ளது.

குழந்தைகளுக்கான சோப், பவுடர், ஷாம்பு உள்ளிட்ட தயாரிப்புகளில் முன்னணியில் இருக்கிறது அமெரிக் காவைச் சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் புற்றுநோயை உண் டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்ப தாக பல காலமாகவே கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், குழந்தை களுக்கான ஷாம்புவில் நிர்ணயிக்கப் பட்ட அளவை விட அதிகமாக ஃபார்மால்டிஹைட் நச்சு இருப்பதாக ராஜஸ்தான் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஜெய்பூரில் நடத்திய ஆய்வுக்கூட சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த சோதனை முடிவுகளின் அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஜான்சன் & ஜான்சன் ஷாம்புவை விற்பனை செய்ய தடை விதிக்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்து கடைகளிலிருந்தும் ஜான்சன்& ஜான்சன் ஷாம்புவை திரும்பப்பெறவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஜான்சன் & ஜான்சன் டால்கம் பவுடரையும் தர நிர்ணய சோதனைக்கு உட்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து ஜான்சன்& ஜான்சன் தரப்பு கூறியதாவது, “இதுபோன்ற இடைக்கால சோதனை முடிவுகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவை என்னவென்று தெரியாத, முறையற்ற சோதனைகளின் மூலம் கிடைத்த முடிவாக இருக்கலாம். எனவே மத்திய மருந்து கட்டுப்பாட்டு சோதனை ஆய்வுக்கூடத்தில் ஆய்வு செய்த பிறகு வரும் முடிவுகளுக்குப் பிறகே ஒரு முடிவுக்கு வருவோம்” என்று கூறியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close