[X] Close

வங்கிகளின் ஆண்டு ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்க ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 27 Apr, 2019 08:31 am
  • அ+ அ-

வங்கிகளின் ஆண்டு ஆய்வறிக்கைகளை ரிசர்வ் வங்கி சமர்ப்பிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாராக்கடன்கள் மீதான ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைளுக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் கொள்கைகளை மறுசீராய்வு செய்ய வங்கிகளின் ஆண்டு ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. வங்கிகள் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கொள்கைகளை நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த அமர்வு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிப்படையாக அனைத்து அறிக்கைகளையும் வெளியிட வேண்டுமெனவும், சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள விவரங்களைத் தவிர அனைத்து விவரங்களும் வெளியிடப்பட வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே ஜனவரி மாதத்தில் வங்கிகளின் ஆண்டு ஆய்வறிக்கைகளைச் சமர்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி அறிக்கைகளைத் தாக்கல் செய்யவில்லை. அதற்காக ரிசர்வ் வங்கிக்கு நீதிமன்ற அவமதிப்பு அடிப்படையில் கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம். இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கிக்கு மற்றுமொரு கடைசி வாய்ப்பு தருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கி என்றாலும் சட்டத்தின் முன் சமம்தான் என்று கூறிய நீதிபதிகள் சட்ட விதிமுறைகளின்படி அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அப்படி தவறும் பட்சத்தில் ரிசர்வ் வங்கியின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close