[X] Close

பிஎன்பி வங்கி மோசடியில் தொடர்புடைய நீரவ் மோடிக்கு ஜாமீன் மறுப்பு- லண்டன் நீதிமன்றம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 27 Apr, 2019 08:30 am
  • அ+ அ-

பொருளாதார குற்றவாளி நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித் துள்ளது. அவரது ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி லண்டன் போலீசாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். தற்போது வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு அனுப்பு வதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் அவருடைய சாட்சிகளுக்கு கொலை மிரட்டல் கள் விடுவதாகவும், ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆதாரங்கள் உள்ள மொபைல் மற்றும் மோசடிகள் குறித்த விவரங் கள் அடங்கிய சர்வர் போன்ற வற்றை அழிக்க முயற்சி செய்த தாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் ஜாமீன் கேட்டு லண்டன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவ ருடைய ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் ரத்து செய்து உத்தர விட்டுள்ளது.

பிஎன்பி வங்கியில் மோசடி செய்தது அம்பலமாகும் முன்பே லண்டனில் குடும்பத்தோடு தஞ்ச மடைந்தவர் நீரவ் மோடி. லண்டனில் வழங்கப்படும் ‘கோல்டன் விசா’ மூலம் அங்கேயே சொகுசாக வாழ லாம் என்ற கனவில் இருந்தார். மல்லையாவைப் போலவே நீரவ் மோடியும் லண்டனில் தனக்குச் சாதகமாக வழக்கு விசாரணைகள் மாறும் என்ற நினைப்பில் இருக் கிறார்.

ஆனால், அது இப்போது மெல்ல தகர்ந்து வருகிறது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.

சொகுசு கார்கள் ஏலம்

நீரவ் மோடி அவரது உறவினர் மெகுல் சோக்ஸி உள்ளிட்டோருக்குச் சொந்தமான 13 சொகுசு கார்கள் ஏலம் விடப்பட்டன. அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதத்தில் பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் நிரவ் மோடி, மெகுல் சோக்ஸியின் கார்களைக் கைப்பற்றி ஏலம் விட முடிவு செய்தது. நீரவ் மோடிக்குச் சொந்தமான 11 கார்களும், மெகுல் சோக்ஸிக்கு சொந்தமான இரண்டு கார்களும் இதில் அடங்கும். போர்ஷே, பிஎம்டபிள்யு, பென்ஸ் போன்ற 13 பிரபல சொகுசு கார்கள் ரூ.3.29 கோடிக்கும் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தை மெட்டல் ஸ்கிராப் டிரேட் கார்ப்பரேஷன் நடத்தியது. இந்தக் கார்களில் ஒரு காரின் விலையே ரூ. 3 கோடி மதிப்பில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close