[X] Close

ஏர் இந்தியாவுடன் ஜெட் ஏர்வேஸை இணைத்து விடலாம் சுப்ரமணியன் சுவாமி பரிந்துரை


  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 08:56 am
  • அ+ அ-

நிதி நெருக்கடியில் சிக்கி செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்தியுள்ள ஜெட் ஏர்வேஸை மத்தியஅரசு நிறுவனமான ஏர் இந்தியாவுடன் இணைத்து விடலாம் என்றுபாஜக தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி ஆலோசனை கூறியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்குஅவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஏர் இந்தியா நிறுவனத்துடன் ஜெட் ஏர்வேஸை இணைப்பதற்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரைக்க வேண்டும்.

இதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் தனது பழைய பெருமையை எட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை தவிர மாற்று வழிகள் எதுவாக இருந்தாலும் அது ஊழலுக்குத்தான் வழி வகுக்கும். மேலும் அதுநீதிமன்றம் வரை செல்லும் என்றுகுறிப்பிட்டார். இத்தகைய தவறுகள் நடக்காத வகையில் தடுக்க வேண்டுமாயின், ஜெட் ஏர்வேஸ் சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும்என குறிப்பிட்டுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அளித்து வந்த விமான சேவை நேரங்கள் பிற நிறுவனங்களுக்கு மூன்றுமாதங்களுக்கு நிபந்தனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா உள்ளிட்ட பிற தனியார் நிறுவனங்கள் பயனடைவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். இதற்கு விமான அமைச்சக அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர் என்றும் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் செயல்பாடு முடக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலுள்ளவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் எதியாட் நிறுவனம் முதலீடு செய்திருப்பது சரியானதல்ல. இந்திய விமான பரப்பை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அளிப்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்புடையதல்ல என்றும் சுவாமி சுட்டிக் காட்டியுள்ளார்.

2012-ம் ஆண்டில் விமானத் துறையில் அந்நிய நேரடி முதலீடுவரம்பு 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து 2013-ல் ஜெட்-எதியாட் உடன்பாடு எட்டப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர்ந்ததையும் அது இறுதி விவாதம் விரைவில் நடைபெற உள்ளதாகவும் அவர்தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். தற்போது ஜெட் ஏர்வேஸ் முடங்கியுள்ளது தனது வாதத்தை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close