[X] Close

மாருதி சுஸுகி லாபம் 4.6% சரிவு


4-6

  • kamadenu
  • Posted: 26 Apr, 2019 08:55 am
  • அ+ அ-

கார் தயாரிப்பில் நாட்டில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் காலாண்டு லாபம் 4.6 சதவீதம் சரிந்துள்ளது.

 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.1,795 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.1,882 கோடியாகும். விற்பனை வருமானம் ரூ.20,737 கோடியாகும். 2018-19-ம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.7,500 கோடியாகும். இது முந்தைய ஆண்டு ஈட்டியதைக் காட்டிலும் 2.9 சதவீதம் குறைவாகும். நிதி ஆண்டின் மொத்த விற்பனை வருமானம் ரூ.83,026 கோடியாகும். விற்பனை வருமானம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 6.3 சதவீதம் அதிகமாகும்.

கடந்த நிதி ஆண்டில் வாகன விற்பனை 4.7 சதவீதம் அதிகரித்து மொத்தம் 18,62,449 கார்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதில் 1,08,749 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஒரு பங்குக்கு 80 காசு டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது.

டீசல் கார்அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்த மாருதி சுஸுகி முடிவு செய்துள்ளது.

2020 ஏப்ரல் 1 முதல் பாரத் – 6 புகை விதி நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே உள்ள டீசல் வாகனங்களை இந்த விதிக்குட்பட்டு தயாரிக்க அதிக முதலீடு தேவை. மேலும் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் டீசல் கார்களுக்கான வரவேற்பு குறைந்து வருகிறது. இதையடுத்தே டீசல் கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது நிறுவன வாகன விற்பனையில் டீசல் கார்களின் பங்கு 23 சதவீத அளவுக்கு உள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close