[X] Close

ஜிஎஸ்டி தாக்கல் செய்யாதவர்கள் இ-வே பில் எடுக்க தடை: நிதி அமைச்சகம் நடவடிக்கை


  • kamadenu
  • Posted: 25 Apr, 2019 08:42 am
  • அ+ அ-

தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு ஜிஎஸ்டி தாக்கல் செய்யாதவர்கள் ஆறு மாதங்களுக்கு சரக்குப் போக்குவரத்துக்கான இ-வே பில் எடுப்பதற்கு தடை விதிக்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை வரும் ஜூன் 21 முதல் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரம்புக்குக் கீழ் இருக்கும் தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் தங்கள் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியை மாதந்தோறும் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். இரண்டு மாதங்கள் தொடர்ந்து தாக்கல் செய்யாமல் தவறினால் அவர்களுக்கான இ-வே பில் அனுமதி தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ஆறு மாதங்களுக்கு விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையானது வரும் ஜூன் 21 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ஜிஎஸ்டி நடைமுறையின் கீழ், 2018 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மட்டுமே 3,626 வரி ஏய்ப்புகள் நடந்துள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.15,278 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு மேலான பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்ல இ-வே பில் அவசியம். ஜிஎஸ்டி தாக்கல் செய்யாதவர்கள் இனி இந்த இ-வேபில் எடுக்க முடியாத நிலை ஏற்படும். இந்த நடவடிக்கையின் மூலம் சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்போரைக் கட்டுப்படுத்த முடியும் என மத்திய மறைமுக வரிகள் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close