[X] Close

கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு


  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 07:05 am
  • அ+ அ-

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததன் விளைவாக இந்திய பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. வாரத்தின் முதல் நாளான திங்களன்று மும்பை பங்குச் சந்தை 495 புள்ளிகள் வரை சரிந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 73.81 டாலர் என்ற விலையில் வர்த்தகமானது. அதேசமயம் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இனிமேலும் சலுகை அளிக்க முடியாது என ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். இதன் காரணமாகவும் பங்குச் சந்தை சரிவடைந்தது என்று நிபுணர்கள் கூறினர்.

மே 2-ம் தேதிக்குப் பிறகு எந்த ஒரு நாட்டுக்கும் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு சலுகை காட்ட முடியாது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ அறிவித்துள்ளார்.

மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் முடிவில் 495 புள்ளிகள் சரிந்து 38,645 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை 158 புள்ளிகள் சரிந்து 11,594 புள்ளிகளாக இருந்தது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் 28 காசுகள் வரை சரிந்து 69.63 என்ற விலையில் வர்த்தகமானது.

யெஸ் வங்கி, இண்டஸ் இந்த் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்தன. ஏறக்குறைய 6.78 சதவீதம் வரை இவை சரிந்தன. இதற்கு அடுத்தபடியாக ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, ஹீரோ மோட்டோகார்ப், மாருதி, வேதாந்தா, ஓஎன்ஜிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, கோடக் வங்கி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகள் 2.20% வரை சரிவைச் சந்தித்தன. ஏர்டெல், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், என்டிபிசி, பவர்கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 0.89 சதவீதம் வரை உயர்ந்தன.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close