[X] Close

ஜெட் ஏர்வேஸ்: நசிம் ஜைதி விலகல்


  • kamadenu
  • Posted: 23 Apr, 2019 07:03 am
  • அ+ அ-

ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவிலிருந்து முன்னாள் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி விலகுவதாக அறிவித்துள்ளார்.

நிதி நெருக்கடி காரணமாக விமான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவன இயக்குநர் குழுவிலிருந்து முன்னாள் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி விலகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இவர் முன்னாள் விமானப் போக்குவரத்து செயலராகவும் இருந்தவர்.

நசிம் ஜைதி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவில் இணைந்தார். தனிப்பட்ட காரணங்களினாலும் நேரமின்மையாலும் பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close