[X] Close

ரயில்வே திட்டங்களில் ரூ. 2.21 லட்சம் கோடி நஷ்டம்


2-21

  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 10:43 am
  • அ+ அ-

ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் 205 திட்டங்களுக்கான செலவு ரூ.2.21 லட்சம் கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது.

புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமல்படுத்தல் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரங்களின்படி இந்திய ரயில்வேயின் 205 திட்டங்களுக்கான செலவு ரூ.2.21 லட்சம் கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டுள்ளதே இந்த செலவின அதிகரிப்புக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

ரூ.150 கோடிக்கு மேலான அரசு திட்டங்களை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமல்படுத்தல் விவகார அமைச்சகம் கண்காணித்து வருகிறது. அதன்படி 205 ரயில்வே திட்டங்களின் மொத்த செலவு டிசம்பர் 2018 நிலவரப்படி ரூ.1.68 லட்சம் கோடி. ஆனால், இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது தாமதமானதால் மொத்த செலவு ரூ.3.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கிட்டதட்ட 131.84 சதவீத உயர்வாகும். இதன் மூலம் அரசுக்கு ரூ.2.21 லட்சம் கோடி நஷ்டம் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

செலவினங்கள் அதிகரிப்பில் ரயில்வேவுக்கு அடுத்ததாக மின்சாரத் துறை உள்ளது. மின்சாரத்துறையில் 40 திட்டங்களுக்கான செலவு ரூ.63,334 கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close