[X] Close

ஜன் தன் கணக்குகளில் ரூ. 1 லட்சம் கோடி


1

  • kamadenu
  • Posted: 22 Apr, 2019 10:42 am
  • அ+ அ-

பிரதமர் மோடி தொடங்கிவைத்த ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கு திட்டத்தில் செய்யப்பட்டுவரும் டெபாசிட் ரூ. 1 லட்சம் கோடியை விரைவில் தாண்ட உள்ளது.

அனைவருக்கும் வங்கி சேவை என்ற நோக்கத்துடன் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆகஸ்ட் 28, 2014-ல் பிரதமர் மோடி இந்த ஜன் தன் யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் ரூ.1 லட்சத்துக்கான தனிநபர் விபத்துக் காப்பீடு வழங்கப்பட்டது. 2018-ல் இது ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதனால், ஜன் தன் யோஜனா திட்டம் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ஜன் தன் கணக்குகளின் எண்ணிக்கை 35.39 கோடியைத் தாண்டியுள்ளது.

மேலும் இந்த ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கு திட்டத்தில் ஏப்ரல் 3-ம் தேதி நிலவரப்படி ரூ.97,665.66 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 27-ம் தேதி ரூ.96,105 கோடியாக இருந்த மொத்த டெபாசிட் மதிப்பு ஒரு வாரத்தில் ரூ.97,665.66 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி தொடர்ந்து நன்றாக இருந்து வந்துள்ளது. இதன் அடிப்படையில் இன்னும் சில வாரங்களில் ஜன் தன் கணக்குகளில் உள்ள டெபாசிட் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி என்ற இலக்கைத் தாண்டும் என நம்பப்படுகிறது.

ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களில் 27.89 கோடி பேருக்கு ரூபே டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜன் தன் கணக்குகளுக்கு ஓவர் டிராப்ட் வசதி இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களில் 50 சதவீதத்துக்கும் மேலானோர் பெண்கள். மேலும் 59 சதவீத கணக்குகள் கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர்களால் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் வங்கிச் சேவை கிடைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டதன் விளைவாக மக்களுக்கு அரசால் வழங்கப்படும் மானியத் தொகைகள் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close