[X] Close

வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்கிய விவகாரம்; விதிமீறல் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல: ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்


  • kamadenu
  • Posted: 21 Apr, 2019 11:09 am
  • அ+ அ-

வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதில் எந்தவித விதிகளையும் மீறவில்லை எனவும் அமெரிக்க அதிகாரிகளின் ஒப்புதலுடன்தான் வர்த்தகம் நடக்கிறது என்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விளக்கம் அளித்துள்ளது.

வெனிசுலாவின் பொருளாதாரம் அதள பாதாளத்தில் உள்ளது. இந்த நிலையில் அதன் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் விதிமுறைகளை மீறி வெனிசுலாவின் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ரிலையன்ஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. பங்குச் சந்தையிடம் சமர்ப்பித்துள்ள விளக்கத்தில், அமெரிக்க பொருளாதார தடை விதிக்கப்படுவதற்கு முன்புதான் வெனிசுலாவின் ரோஸ்நெஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் வாங்கியதாகவும், தடைக்குப் பிறகு அமெரிக்க அதிகாரிகளின் ஒப்புதலுடன்தான் எண்ணெய் வாங்கியதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுவும் அந்நிறுவனங்கள் தர வேண்டிய கடனுக்கு ஈடாகவே எண்ணெய் வாங்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. ஆனால், வெனிசுலாவின் பிடிவிஎஸ்ஏ நிறுவனத்திடமிருந்து விதிகளை மீறி எண்ணெய் வாங்கியதாகவும், அதற்கான தொகையை ரோஸ்நெஃப்ட் மூலம் பரிமாற்றம் செய்துள்ளதாகவும் ரிலையன்ஸ் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், ரிலையன்ஸ் தரப்பு அமெரிக்காவின் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என தெளிவாக மறுப்பு தெரிவித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close