[X] Close

ஹெச்டிஎப்சி வங்கி லாபம் 23% உயர்வு


23

  • kamadenu
  • Posted: 21 Apr, 2019 10:58 am
  • அ+ அ-

ஹெச்டிஎப்சி வங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.5,885 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபத்தைக் காட்டிலும் இது 22.63 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.4,799 கோடியாகும்.

வட்டி மூலமான வருமானம் 22.8 சதவீதம் அதிகரித்து ரூ. 13,089 கோடியைத் தொட்டுள்ளது. வாராக் கடனுக்கான ஒதுக்கீடு ரூ. 1,889 கோடியாகும்.
முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ. 1,541 கோடி ஒதுக்கப்பட்டது. வாராக் கடன் அளவு 1.36 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 1.30 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close