[X] Close

சம்பள பாக்கி: குடியரசு தலைவர் தலையீடு அவசியம்; ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கோரிக்கை


  • kamadenu
  • Posted: 21 Apr, 2019 10:44 am
  • அ+ அ-

ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அதன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பள பாக்கியைத் தருவதற்கான நடவடிக்கை எடுக்கவும், மீண்டும் ஜெட் ஏர்வேஸை செயல்படுத்த தேவையான அவசர நிதியை வழங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

23 ஆயிரம் பேர் பணிபுரியும் ஜெட் ஏர்வேஸ் நிதி நெருக்கடியில் தொடர்ந்து செயல்பட முடியாமல் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி முதல் தற்காலிகமாக விமான சேவையை நிறுத்தியது. இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் சம்பள பாக்கியை கேட்டும், ஜெட் ஏர்வேஸை காப்பாற்ற வேண்டியும் போராட்டத்தில் இறங்கினர்.

தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனித்தனியாகக் கடிதம் எழுதியுள்ளனர். குடியரசுத் தலைவரும், பிரதமரும் தலையிட்டு ஊழியர்களுக்கான சம்பள பாக்கியைப் பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “சூழ்நிலை கருதி உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டுமென மன்றாடி கேட்கிறோம். ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்திடம் பேசி எங்களுக்கான ஊதிய பாக்கியை விரைந்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேசமயம், ஜெட் ஏர்வேஸுக்கு தேவையான அவசர கால நிதியை ஏற்பாடு செய்யவும் வேண்டிக் கேட்கிறோம். ஏனெனில் இத்தகைய நெருக்கடியான தருணத்தில் ஒவ்வொரு முடிவும் முக்கியமானது. எவ்வளவோ முயற்சிகளை எடுத்து வருகிறோம், ஆனால் இதுவரையிலும் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கை கிடைக்கவில்லை. ஜெட் ஏர்வேஸ் மூழ்கிக் கொண்டிருப்பதை உணர்கிறோம். இதனால் நாங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. இதனோடு தொடர்புடைய தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களும் ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவுபெரிய ஏர்லைன்ஸ் நிறுவனம் காணாமல் போனது பெரியவெற்றிடத்தை உண்டாக்கி யுள்ளது” என்று கூறியுள்ளனர்.

ஊழியர்களில் பலருக்கு ஏழுமாத ஊதியம் பாக்கி இருப்பதாக வும் அதில் குறிப்பிட்டுள்ளனர். பைலைட்டுகளுக்கு இன்ஜினியர் களுக்கும் மூன்று மாதங்களுக்கும் மேலாக சம்பள பாக்கி உள்ளது. ஊதியம் வழங்கப்படாததால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவருவதாகவும் அவர்கள் தெரி வித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close