[X] Close

சீனாவிலிருந்து வெளியேற அமேசான் முடிவு


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 10:12 am
  • அ+ அ-

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், சீனாவிலிருந்து தனது செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்திவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது. அங்குள்ள உள் நாட்டு நிறுவனமான அலிபாபா-வுக்கெதிரான போட்டியை சமாளிக்க முடியாமலும், அமெரிக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் காரணமாகவும் சீனாவிலிருந்து வெளியேறும் முடிவை அமேசான் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அதேசமயம் சீனாவில் அமேசான் வெப் சர்வீஸ் (ஏடபிள்யூஎஸ்), கின்டில் இ-புக் உள்ளிட்ட சேவைகளைத் தொடரலாம் என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சீனாவில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அலிபாபா, ஜேடி.காம் ஆகிய நிறுவனங்கள் அமேசானுக்கு கடுமையான சவாலாகத் திகழ்கின்றன. இந்தப் போட்டிகளை சமாளித்து தங்களது வியாபாரத்தை தொடங்கிய அமேசான் 2004-ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த ஜோயோ எனும் ஆன்லைன் புத்தக விற்பனை நிலையத்தைக் கையகப்படுத்தியது.

சீனாவில் உள்ளவர்களுக்கு வெளிநாடுகளைச் சார்ந்த தயாரிப்புகள் தேவைப்படுகின்றன. அவற்றை மட்டும் வாங்கி அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. சீனாவில் செயல்பாடுகளை மூட முன்வந்துள்ள அமேசான் தனது கவனத்தை முழு வீச்சில் இந்தியா மீது செலுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close