[X] Close

ரிலையன்ஸ் லாபம் ரூ. 10,362 கோடி


10-362

  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 10:09 am
  • அ+ அ-

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 10,362 கோடி லாபம் ஈட்டிஉள்ளது. முந்தைய இதே காலத்தில் ஈட்டியதைக் காட்டிலும் 9.8 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு நிறுவனத்தின் லாபம் ரூ. 9,438 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் லாபம் 19.4 சதவீதம் உயர்ந்து ரூ. 1,54,110 கோடியாக உள்ளது. சில்லரை வர்த்தகம் மூலமான லாபம் 77 சதவீதம் அதிகரித்து ரூ. 1,923 கோடியைத் தொட்டுள்ளது. தொலைத் தொடர்பு லாபம் ரூ.78.3 சதவீதம் அதிகரித்து ரூ.2,665 கோடியை எட்டியது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close