[X] Close

மைண்ட் ட்ரீ நிகர லாபம் 8.9 சதவீதம் உயர்வு


8-9

  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 10:06 am
  • அ+ அ-

பிரபல ஐடி நிறுவனமான மைண்ட் ட்ரீ கடந்த நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் நிகர லாப வளர்ச்சியில் 8.9 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது.

பெங்களூரை மையமாகக் கொண்டு செயல்படும் மைண்ட் ட்ரீ நிறுவனம் முடிந்த நிதி ஆண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.198.4 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் இதன் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ.182.2 கோடியாக இருந்தது. இதன் அடிப்படையில் 8.9 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதேபோல் இதன் வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் 25.6 சதவீதம் உயர்ந்து ரூ.1,839.4 கோடியாக உள்ளது. மைண்ட் ட்ரீ நிறுவனத்தை எல் அண்ட் டி கைப்பற்றும் முயற்சிகள் நடந்தது நாடு முழுவதும் பேசுபொருளானது. இந்நிலையில் இந்நிறுவனம் டிவிடெண்ட் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. காரணம், நிறுவனம் தனது 20-வது ஆண்டை நிறைவு செய்கிறது. அதேசமயம், ஆண்டு விற்பனை ஒரு பில்லியன் டாலரைக் கடந்துள்ளது. இந்த இரண்டு வெற்றியையும் கொண்டாடும் விதமாக, இடைக்கால டிவிடெண்ட் பங்குக்கு ரூ.3 வீதமும், சிறப்பு டிவிடெண்டாக பங்கு ரூ.20 வீதமும் வழங்க முடிவு செய்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close