[X] Close

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 09:15 am
  • அ+ அ-

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று 25 காசுகள் சரிந்து ரூ. 69.42 என்ற விலையில் வர்த்தகமானது. தொடர்ந்து விடுமுறைகள் வருவதால் டாலரை வாங்கும் போக்கு அதிகமாக இருந்தது. இதன் காரணமாக ரூபாய் மதிப்பு சரிந்தது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரூ. 69.07 என்ற விலையில் வர்த்தகமானது. ஆனால் நேற்று மதிப்பு சரிந்ததால் ரூ. 69.42 என்ற நிலையை எட்டியது.

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை விடுமுறை நாளாகும். ஈஸ்டரை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நிதிச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 713 கோடி அளவுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தன.

சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.84 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 70.95 டாலர் என்ற விலையில் வர்த்தகமானது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close