[X] Close

உணவுப் பணவீக்கம் 3.18 சதவீதமாக உயர்வு


3-18

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 09:15 am
  • அ+ அ-

உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒட்டுமொத்த விற்பனை விலை குறியீட்டெண் மார்ச் மாதம் 3.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வும் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி மாதம் 2.93 சதவீதமாகவும், ஜனவரியில் 2.76 சதவீதமாகவும் இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2.74 சதவீதமாக இருந்தது.

பணவீக்கமும் 3.18 சதவீத அளவுக்கு இருக்கும் என தெரிகிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் பணவீக்கம் 2.74 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

காய்கறிகளின் விலை 28.13 சதவீதம் அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவாக 5.68 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை பிப்ரவரியில் 4.28 சதவீதமாகவும் ஜனவரியில் 2.41 சதவீதமாகவும் இருந்தது. எரிபொருள் பணவீக்கம் பிப்ரவரியில் 2.23 சதவீதமாக இருந்தது மார்ச் மாதம் 5.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. சில்லரை பணவீக்கம் மார்ச் மாதம் 2.86 சதவீதமாக உயர்ந்தது. இது பிப்ரவரியில் 2.57 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close