[X] Close

ஜெட் ஏர்வேஸ் பைலட் சங்கம் கோரிக்கை: எஸ்பிஐ-யிடம் ரூ. 1,500 கோடி நிதி உதவி; பிரதமர் தலையிட வலியுறுத்தல்


1-500

  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 09:11 am
  • அ+ அ-

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ரூ.1,500 கோடி முதலீடு செய்யுமாறு பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான குழுவுக்கு ஜெட் ஏர்வேஸ் பைலட்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மாதம் வகுக்கப்பட்ட கடன் சீரமைப்பு திட்டத்தின் கீழ் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ரூ.1,500 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்தத் தொகை இதுவரை விடுவிக்கப்படவில்லை. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது 7 விமானங்களை மட்டுமே இயக்குகிறது. மற்ற விமானங்கள் அனைத்துமே குத்தகை பாக்கி காரணமாக தரை இறக்கப்பட்டுள்ளன.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை நம்பி 20 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களது வேலை வாய்ப்பைக் காப்பாற்ற இந்நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம். எனவே நிலைமையின் தீவிரத் தன்மை கருதி இதில் பிரதமர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பைலட் சங்கத்தின் தலைவர் அதிம் வலியானி தெரிவித்துள்ளார்.

முன்னதாக தங்களது ஒற்றுமையை அரசுக்கு வலியுறுத்த மும்பை விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் பைலட்கள், பொறியாளர்கள், கேபின் பணியாளர்கள் ஒன்று திரண்டனர்.

இந்நிறுவனத்தின் பைலட்டுகள், இன்ஜினீயர்களுக்கு 2018 டிசம்பர் வரைதான் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர பிற நிலை பணியாளர்களுக்கு தற்போது மார்ச் மாத ஊதியமும் வழங்கப்படவில்லை.

கடந்த மாதம் எஸ்பிஐ தலைமையிலான குழு ஜெட் ஏர்வேஸ் நிர்வாக பொறுப்பை ஏற்றது. புதிய முதலீட்டாளர் கிடைக்கும் வரை நிறுவனத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.1,500 கோடியை முதலீடு செய்வதென அப்போது முடிவு செய்யப்பட்டது.-பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close