[X] Close

மனம் நெகிழ வைத்த திரைப்பட விழா


  • Posted: 13 Dec, 2013 13:59 pm
  • அ+ அ-

வணிகப் பயன்பாட்டு வாகனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கூட்டு தொழிலில் ஈடுபட பிற நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்கான முயற்சியில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் பிற நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு தொழிலில் ஈடுபடத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. எலெக்ட்ரிக் வாகன பிரிவுக்கான தொழில்நுட்பங்கள், கட்டமைப்புகள் போன்றவற்றைக் கொண்டுவருவதற்கு நிறைய செலவாகலாம் என்பதால் பிற நிறுவனங்களுடன் இணைந்து கூட்டாக செயல்பட்டு எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் தீரஜ் ஹிந்துஜா கூறியதாவது, “எலெக்ட்ரிக் வாகனப் பிரிவுக்கு நிறுவனத்தில் தனியாக ஒரு குழு உள்ளது. ஆனால், எலெக்ட்ரிக் வாகனப் பிரிவு புதியது என்பதால் பல சவால்களும் மாற்றங்களும் உள்ளன. எனவே இந்தப் பிரிவில் வாய்ப்புகள் எதில், எப்படி உள்ளது என்பதை அறிய திறந்த மனப்பான்மையோடு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எனவே ஆக்கபூர்வமான கூட்டு தொழில் ஒப்பந்தத்துக்கு நிறுவனங்களை வரவேற்க தயாராகி உள்ளோம்” என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close