[X] Close

ஐஎல் அண்ட் எஃப்எஸ் முன்னாள் சிஇஓ ரமேஷ் பாவா கைது


  • kamadenu
  • Posted: 14 Apr, 2019 08:30 am
  • அ+ அ-

ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ரமேஷ் பாவா கைது செய்யப்பட்டுள்ளார். தீவிர பொருளாதார மோசடி குற்றங்களை விசாரிக்கும் (எஸ்எஃப்ஐஓ) அலுவலக அதிகாரிகள் நேற்று முன் தினம் அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்படலாம் என்பதால் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனம் திரும்ப செலுத்த வேண்டிய கடன் பொறுப்புகளில் அளவுக்கு அதிகமாக முறைகேடுகள் நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நிர்வாகம் மிக மோசமான நிலைக்கு சென்றநிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரமேஷ் பாவா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இவர் மீது கம்பெனி சட்டப் பிரிவு 447-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஹரி சங்கரன் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது ரமேஷ் பாவா கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.91 ஆயிரம் கோடி கடன்

ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனத்துக்கு ரூ. 91 ஆயிரம் கோடிக்கு கடன் சுமை உள்ளது. 1987-ம் ஆண்டு சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி மற்றும் யுடிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒன்றிணைந்து கட்டமைப்புத் துறைக்கென இந்நிறுவனத்தை உருவாக்கின.

கடன் தொகைகளை திரும்ப செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்ட போதுதான் நிறுவனத்தில் நடைபெற்ற நிதி முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு ஏற்றது.

(``வங்கித் துறைக்கு புதிய நெருக்கடி ஐஎல் அண்ட் எஃப்எஸ்’’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 1 வணிக வீதி இதழில் முதல் பக்க கட்டுரை வெளியானது.)

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close