[X] Close

இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டாம்: விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு


  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 09:10 am
  • அ+ அ-

இந்திய வங்கிகளில் கடன் வாங்கி நாட்டிலிருந்து தப்பியோடிய விஜய் மல்லையா தன்னை நாடு கடத்த வேண்டாம் என லண்டன் நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த வாரம் லண்டன் நீதிமன்றத்தில் தன்னை நாடு கடத்தும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என விஜய் மல்லையா மனுத் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை லண்டன் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், அந்த மனு மீது மீண்டும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்திய வங்கிகள் ரூ. 9,000 கோடி அளவில் கடன் வாங்கி திரும்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததற்கு, விஜய் மல்லையா மீது, அமலாக்கத் துறையும், சிபிஐயும் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கின. நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க நாட்டிலிருந்து தப்பியோடி லண்டனில் தஞ்சமடைந்தார்.

அதன் பிறகு தப்பியோடிய பொருளாதார குற்றவாளி என்ற சட்டத்தின் கீழ் அவரைக் கொண்டு வந்து, அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்தது அமலாக்கத் துறை. இதற்கிடையில் அவரை இந்தியா கொண்டுவருவதற்கான வழக்கும் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அனைத்து விசாரணைகளிலும் மல்லையா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவரை நாடு கடத்தலாம் என நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது.

எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், தன்னை நாடு கடத்த வேண்டாம் என விஜய் மல்லையா லண்டன் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. தற்போது விடாமல் மீண்டும் அந்த மனு மீது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு விசாரிப்பார்களா என்பது வரும் வாரங்களில்தான் தெரியும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close