[X] Close

கூகுள் பே செயலியில் தங்கம் வர்த்தகம்


  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 08:53 am
  • அ+ அ-

பிரபல தேடுதல் பொறி நிறுவனமான கூகுள்தனது கூகுள் பே என்ற பேமென்ட் செயலியில் தங்கம் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.

எம்எம்டிசி - பிஏஎம்பி ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து இந்த தங்கம் வர்த்தக சேவையை கூகுள் பே வழங்குகிறது. இந்த வசதி ஏற்கெனவே பேடிஎம், போன்பே, மொபிக்விக் உள்ளிட்டவற்றில் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது இந்த வரிசையில் கூகுள் பே செயலியும் இணைந்துள்ளது. கூகுள் பே பயனாளர்கள் இந்த செயலியின் மூலம் 99.99 சதவீத 24 கேரட் தங்கத்தை வாங்கலாம், விற்கலாம். எந்த மதிப்புக்கும் தங்கத்தை வாங்கலாம். பயனாளர்கள் வாங்கும் தங்கம், எம்எம்டிசி-பிஏஎம்பி மூலம் பாதுகாக்கப்படும். செயலியில் வாங்கிய தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் அதன் சமீபத்திய விலையில் விற்றுக்கொள்ளலாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close