[X] Close

ஏர்டெல்- டாடா டெலிசர்விசஸ் இணைப்புக்கு ரூ.7,200 கோடிக்கு வங்கி உத்தரவாதம்: தொலைத்தொடர்பு துறை வலியுறுத்தல்


7-200

  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 08:54 am
  • அ+ அ-

தொலைத்தொடர்பு சேவைநிறுவனங்களான ஏர்டெல் மற்றும் டாடா டெலிசர்விசஸ் இணைப்புக்கு ரூ.7,200 கோடிக்கு வங்கி உத்தரவாதம் தர வேண்டும் என தொலைத் தொடர்பு துறை கூறியுள்ளது.

நிபந்தனை ஒப்புதல்

தொலைத்தொடர்பு துறைஅமைச்சர் மனோஜ் சின்ஹாகடந்த ஏப்ரல் 9-ம் தேதிஏர்டெல் - டாடா டெலிசர் விசஸ் இணைப்புக்கு நிபந் தனையுடன் கூடிய ஒப்புதல் வழங்கினார். சுனில் பார்தி மிட்டல் ரூ.7,200 கோடிக்கு வங்கி உத்தரவாதம் தரவேண்டும் என்பதே அந்தநிபந்தனை. இதில் ஒருமுறை செலுத் தப்படும் அலைக்கற்றை கட்டணத்துக்கு ரூ. 6,000 கோடியும், ரூ. 1,200 கோடி அலைக்கற்றைக்கும் என வங்கி உத்தரவாதம் தர வேண்டும் எனக் கூறியுள்ளது. பார்தி ஏர்டெல், டாடாடெலிசர்விசஸ் நிறுவனங் களின் இணைப்பு நடவடிக் கைக்கு ஒப்புதல் வழங்கி யுள்ள தொலைத்தொடர்பு துறை இந்த நிபந்தனையை நிறைவேற்ற வேண்டுமென சுனில் பார்தி மிட்டலுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் இணைப்பில் ஈடுபடும் இரண்டு நிறுவனங் களும், இணைப்புக்கு முன்னதாக இரு நிறுவனங்களின் அனைத்து வழக்கு விவகாரங் கள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பின் மூலம் டாடாவின் மொபைல் சேவை தொழில்கள் ஏர்டெல் வசம் வரும். மேலும் அலைக்கற்றை தொடர்பாக டாடா நிலுவையில் வைத்துள்ள தொகைக்கும் ஏர்டெல் பொறுப்பேற்கும் எனக் கூறியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close