[X] Close

ஜெட் ஏர்வேஸ் கடனுக்காக நரேஷ் கோயல் 26% பங்குகள் அடமானம்


26

  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 08:52 am
  • அ+ அ-

ஜெட் ஏர்வேஸ் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய கடனுக்காக நரேஷ் கோயல் தன் வசமிருந்து 26 சதவீத பங்குகளை அடமானமாகக் கொடுத்துள்ளார்.

நிதி நெருக்கடியில் சிக்கி தள்ளாடும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு உள்ள கடன் சுமையைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அதன் முன்னாள் தலைவரும், அதிக பங்குகளை தன் வசம் வைத்துள்ள பங்குதாரர் நரேஷ் கோயலும் தன் வசமுள்ள பங்குகளில் 26 சதவீதத்தை அடமானமாகக் கொடுத்துள்ளார். மொத்ததமாக 2.95 கோடி பங்குகள் அடமானமாக வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பங்குச் சந்தையிடம் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஜெட் ஏர்வேஸ்நிறுவனத்தை மீட்டு தொடர்ந்துசெயல்படுத்த எஸ்பிஐ தலைமையிலான வங்கி குழு நிறுவனத்தைப் பழைய நிர்வாகத்திடமிருந்து கைப்பற்றியது.

நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் தங்கள் பதவிகளிலிருந்து வெளியேறினர். இதையடுத்து தற்போது தன் வசமிருந்த 51 சதவீத பங்குகளில் 26 சதவீத பங்குகளைக் கடனுக்கு ஈடாக பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் கொடுத்துள்ளார். இந்த நடவடிக்கை ஏப்ரல் 4-ம் தேதியே செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநாளில், அவரிடமிருந்து 5.79 கோடி அளவிலான பங்குகள் பெறப்பட்டு, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பிற கடனுக்கான அடமானமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப் பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close