[X] Close

நேரடி வரி வருவாயில் ரூ. 50,000 கோடி பற்றாக்குறை


50-000

  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 10:18 am
  • அ+ அ-

கடந்த நிதி ஆண்டில் 2018-19 நேரடி வரி வருமானம் ரூ. 50 ஆயிரம் கோடி வரை குறையும் என்று அரசு மதிப்பிட்டுள்ளது. அரசு நிர்ணயித்த இலக்கு ரூ. 12 லட்சம் கோடியாகும்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு அமல்படுத்தியதால் இலக்கு எட்டப்படவில்லை என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நிதிப் பற்றாக்குறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ஜிடிபி-யில் 3.4 சதவீத அளவுக்கு வைக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது. வரி வருவாய் பற்றாக்குறையால் இது இது பாதிக்கப்படும் என தெரிகிறது.2018-19-ம் நிதி ஆண்டில் நேரடி வரி வருமானம் ரூ. 11.50 லட்சம் கோடியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த பட்ஜெட் தாக்கலின்போது நேரடி வரி வருவாய் ரூ. 11.5 லட்சம் கோடி என நிர்ணயிக்கப்பட்டது. திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது ரூ. 12 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால் இலக்கு எட்டப்படவில்லை.

அதேசமயம் ஜிஎஸ்டி வசூல் ரூ. 6.44 லட்சம் கோடி என நிர்ணயிக்கப்பட்டது. முன்னர் இது ரூ. 7.44 லட்சம் கோடியாக இருந்தது. பின்னர் திருத்திய மதிப்பீட்டில் இலக்கு குறைக்கப்பட்டது.

ஜிஎஸ்டி கவுன்சில் பல பொருள்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரி அளவைக் குறைத்தது. இதனால் வரி வருவாய் குறைந்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close