[X] Close

விற்பனை ஆலோசகர்கள் 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி: ஹூண்டாய் நிறுவனம் திட்டம்


10

  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 10:19 am
  • அ+ அ-

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது அதி நவீன தொழில்நுட்பம் மிகுந்த கார் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் விளக்க 10 ஆயிரம் விற்பனை ஆலோசகர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.

இந்நிறுவனம் அடுத்த மாதம் ``வென்யூ’’ என்ற பெயரில் புதிய மாடல் எஸ்யுவி-யை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தக் கார் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டது. புளூலிங்க் எனப்படும் செயலி (ஆப்) மூலம் இந்த காரை செயல்படுத்தலாம். ஸ்மார்ட்போன் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய இந்தக் கார் பற்றிய விவரங்களை விளக்கவும் இந்த ஆலோசகர்களுக்கு பயிற்சி தரப்படும்.

நிறுவனம் ஏற்கெனவே 615 பேருக்கு இந்த புளூ லிங்க் செயலி குறித்த பயிற்சியை அளித்துள்ளது. இந்த நுட்பமானது சர்வதேச அளவில் ஹூண்டாய் நிறுவனம் பின்பற்றும் நுட்பமாகும். சர்வதேச அளவில் இந்த செயலியில் 33 விதமான வசதிகள் உள்ளன. இதில் இந்தியாவுக்கென 10 சிறப்பம்சங்கள் மட்டும் இப்போதைக்கு செயல்படுத்தப்பட உள்ளது என்று நிறுவனத்தின் சந்தைப் பிரிவு பொது மேலாளர் புனீத் ஆனந்த் தெரிவித்தார்.

வாகனத்தின் பாதுகாப்பு, கார் இருக்குமிடம், அலெர்ட் சேவை, வாகன நிர்வாகம் (விஆர்எம்), செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்டவை இடம்பெறும்.

வென்யூ காரின் சிறப்பம்சங்களை வாடிக்கையாளர்கள் உணரும் வகையில் அதற்கான சிமுலேஷன் கருவிகள் விற்பனையகத்தில் இருக்கும். வாடிக்கையாளர்கள் அங்கு சென்று கார் ஓட்டும் அனுபவத்தைப் பெறலாம். நாடு முழுவதும் ஹூண்டாய் நிறுவனத்துக்கு 491 விற்பனையாளர்கள் உள்ளனர்.

நெட்வொர்க் இணைப்புக்கு வோடபோன்-ஐடியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறிப்பாக விபத்து அறிவிப்பு, உதவி, எஸ்ஓஎஸ் அவசர தேவை, சாலையில் உதவி உள்ளிட்ட பல அம்சங்கள் வென்யூ மாடல் காரில் உள்ளன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close