[X] Close

விமான எரிபொருள் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்


  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 08:55 am
  • அ+ அ-

விமான சேவை நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியான தொழில் சூழலை உருவாக்க வேண்டுமெனில் விமான எரிபொருளை ஜிஎஸ்டி நடைமுறைக்குள் கொண்டுவர வேண்டும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.

நெருக்கடியில் ஏவியேஷன் துறைஅரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா முதல் தனியார் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் வரை அனைத்து விமான சேவை நிறுவனங்களும் லாபம் ஈட்டுவதிலும் தொடர்ந்து நிதி ஸ்திரமான நிதி நிலையைத் தக்க வைப்பதிலும் சவால்களைச் சந்தித்துவருகின்றன. விமானப் போக்குவரத்து துறை நெருக்கடியான நிலையைச் சந்தித்துள்ளதால், இந்தக் கருத்தை அவர் கூறியுள்ளார். விமானங்களுக்கான ஏவியேஷன் டர்பைன் எரிபொருளை ஜிஎஸ்டி நடைமுறைக்குள் கொண்டு வருவதன் மூலம் விமான சேவை நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியான தொழில் சூழலை உருவாக்க முடியும் என்றார்.

மேலும் அவர் கூறியதாவது, “எல்லா துறைகளிலுமே உள்ளீடு செலவு என்பது சவாலானதாகவே இருக்கிறது. முக்கியமாக விமான சேவைத் துறையில் பெரும் செலவு என்றால் அது எரிபொருள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வரி இருப்பதால், எரிபொருளுக்கான செலவு என்பது முற்றிலுமாக மாறுகிறது. எனவே விமான எரிபொருளை ஜிஎஸ்டி நடைமுறைக்குள் கொண்டுவருவதை அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலிடம் தொடர்ந்து பேசி வருகிறோம்” என்றார்.

ரூ. 5,000 கோடி மிச்சம்

விமான எரிபொருள் ஜிஎஸ்டி நடைமுறைக்குள் கொண்டுவரப்பட்டால் உள்ளீடு வரி திரும்பப் பெறல் மூலம் விமான சேவை நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி மிச்சமாகும் என்றும் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close