[X] Close

வோடபோன் ஐடியா நிறுவனத்தில் ரூ.18 ஆயிரம் கோடி அந்நிய நேரடி முதலீடு


18

  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 08:54 am
  • அ+ அ-

வோடபோன் ஐடியா நிறுவனத்தில் ரூ. 18 ஆயிரம் கோடி அளவிலான அந்நிய முதலீடு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு உரிமைப்பங்கு வெளியீடு செய்வதற்கு தயாராகி வருகிறது. ஏப்ரல் 10-ம் தேதி இந்த வெளியீடு தொடங்குகிறது. இந்த வெளியீட்டில் ஒரு பங்கு ரூ.12.50 என்ற விலைக்கு வழங்கப்படுகிறது. இது தற்போதைய சந்தை மதிப்பை காட்டிலும் 61 சதவீத தள்ளுபடி விலையாகும்.

இந்த வெளியீட்டில் ஒரு பகுதி முதலீட்டை அந்நிய முதலீட்டாளர்களிடமிருந்து பெற அரசிடம் கோரிக்கை வைத்தது. அதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், உரிமைப் பங்கு வெளியீட்டில் சுமார் ரூ. 18 ஆயிரம் கோடி அளவுக்கு அந்நிய முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீட்டுக்கு அரசு அனுமதி பெற வேண்டியது கட்டாயம். வோடபோன் கோரிக்கைக்கு அரசு பிப்ரவரி 28-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதன்படி வோடபோன் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. ஆதித்யா பிர்லா குழுமம் தனது வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக ரூ.7,250 கோடியை முதலீடு செய்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close