[X] Close

2018-19 நிதி ஆண்டில் நிலக்கரி இறக்குமதி 7.8 சதவீதம் உயர்வு


2018-19-7-8

  • kamadenu
  • Posted: 08 Apr, 2019 08:53 am
  • அ+ அ-

இந்தியா இறக்குமதி செய்யும் நிலக்கரி அளவு கடந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் 7.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

மின் உற்பத்திக்கு மிக முக்கிய மூலப் பொருளாக இருக்கும் நிலக்கரியை இந்தியா வெளிநாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்துவருகிறது. இந்தியாவின் நிலக்கரி தேவையை உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்ய முடியவில்லை. கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இந்நிறுவனத்துக்கு அரசு 1 பில்லியன் டன் உற்பத்தி இலக்கு வைத்திருந்தது. ஆனால், அந்த இலக்கு எட்டப்படவில்லை. இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க அரசு எண்ணியிருக்கும் நேரத்தில், இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி அளவு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

2017-18-ம் நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் நிலக்கரி இறக்குமதி 196.59 மில்லியன் டன்னாக உள்ளது. இது 2018-19 நிதி ஆண்டில் 212.11 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close