[X] Close

உலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ்


  • kamadenu
  • Posted: 07 Apr, 2019 08:22 am
  • அ+ அ-

உலக வங்கியின் தலைவராக டேவிட் மால்பாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உலக வங்கியின் செயல் குழு எவ்வித போட்டியுமின்றி 63 வயதாகும் டேவிட் மால்பாஸை தலைவராக தேர்வு செய்துள்ளது.

தற்போது ட்ரம்ப் அமைச்சரவையில் நிதித்துறை துணை அமைச்சராகவும், சர்வதேச கருவூல விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பையும் வகிக்கிறார். இவர் உலக வங்கியின் 13-வது தலைவராக ஏப்ரல் 9-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.

இதுவரையில் உலக வங்கியின் தலைவராக பொறுப்பு வகித்த அனைவருமே அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மறு சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி (ஐபிஆர்டி) மற்றும் சர்வதேச மேம்பாட்டு கூட்டமைப்பு (ஐடிஏ) ஆகியவற்றின் இயக்குநர் குழுவுக்கும் உலக வங்கித் தலைவரே தலைவராக இருப்பார்.

இது தவிர சர்வதேச நிதி கார்ப்பரேஷன் (ஐஎப்சி), பன்முக முதலீட்டு உத்தரவாத முகமை (எம்ஐஜிஏ), முதலீடு சார்ந்த சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் சர்வதேச நிர்வாகக் கவுன்சிலின் (ஐசிஎஸ்ஐடி) பொறுப்புகள் ஏதும் இல்லாத தலைவராக இருப்பார்.

நிதித்துறை துணை அமைச்சரான மால்பாஸ், ஜி-7 மற்றும் ஜி-20, துணை நிதி அமைச்சர்கள் மாநாடு, உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) போன்றவற்றின் கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.

நிதித்துறை துணை அமைச்சராக உள்ள இவர் உலக வங்கி குழும செயல்பாடுகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர முயற்சி மேற்கொண்டவர். அதேபோல உலக வங்கி மற்றும் ஐஎம்எப் உள்ளிட்டவற்றில் கடன் வழங்குதல் போன்ற நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மை உருவாகக் காரணமாயிருந்தவர்.

கொலராடோ கல்லூரியில் இளங்கலையும், டென்வர் பல்கலையில் எம்பிஏ முதலுகலைப் பட்டமும் பெற்றவர். ஜார்ஜ் டவுன் பல்கலையில் சர்வதேச பொருளாதாரம் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close