[X] Close

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக கடனுக்கான வட்டியை குறைத்தது ஆர்பிஐ- திவால் நடைமுறையில் புதிய விதிமுறைகள்


  • kamadenu
  • Posted: 05 Apr, 2019 09:15 am
  • அ+ அ-

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி நேற்று கடனுக்கான வட்டி விகி தத்தை 0.25 சதவீதம் குறைத்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னராக சக்தி காந்த தாஸ் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளப்படும் இரண்டாவது வட்டிக் குறைப்பு நடவடிக்கை இதுவாகும். ஆறு பேரடங்கிய நிதிக்கொள்கைக் குழுவில் வட்டி குறைப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக 4 பேரும், வட்டி குறைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் 2 பேரும் வாக்களித்தனர். பாமி துவா, ரவீந்திர ஹெச் தோலகியா, மைக்கேல் தேப்ரதா பாத்ரா, சக்தி காந்த தாஸ் ஆகியோர் ஆதரவாகவும், சேதன் கதே, வீரல் ஆச்சார்யா ஆகியோர் வட்டிக்குறைப்புக்கு எதிராகவும் வாக்களித்தனர்.

0.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்ட நிலையில் இனி வட்டி விகிதம் 6 சதவீதமாக இருக்கும். முந்தைய நிதிக் கொள்கை கூட்டம் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி நடைபெற்றது. அப்போது 6.5 சதவீதமாக இருந்த வட்டி 6.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. தற்போது இது மேலும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவீதமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 சதவீதம் என்ற நிலையில் வட்டி விகிதம் இருந்தது குறிப்பிடத்தக்கது. பணவீக்கத்தை தொடர்ந்து 4 சதவீதம் என்ற நிலையில் கட்டுக்குள் வைக்க ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது. அதேசமயம் வளர்ச்சியை முடுக்கிவிடும் விதமாகவட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சில மாநில அரசுகள் அறிவித்துள்ள வேளாண் கடன் ரத்து நடவடிக்கைகள், விளை பொருளுக்கு கூடுதல் ஆதார விலை நிர்ணயம் மற்றும் வரி வசூல் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பது பெரும் சவாலான விஷயமாக இருக்கும் என்று சுட்டிக் காட்டியுள்ளது.

அதேசமயம் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், சர்வதேச நிதிச் சந்தையில் நிலவும் ஸ்திரமற்ற நிலை, அழுகும் வேளாண்பொருட்கள் மீதான விலையில் நிலவும் ஏற்றத் தாழ்வு உள்ளிட்ட வையும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைப்பதில் பெரும் சவாலை ஏற்படுத்தும் காரணியாக இருக்கும் என்று ஆர்பிஐ குறிப் பிட்டுள்ளது.

உணவுப் பணவீக்கம் 3 சதவீத அளவுக்கு இருக்கும் என்றும் ஆர்பிஐ கணித்துள்ளது. விரைவில் புதிய விதிமுறைகள்திவால் நடவடிக்கை தொடர்பாக ரிசர்வ் வங்கி பிறப்பித்த உத்தர வுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. இதுகுறித்து ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, வாராக் கடனை மீட்க மேற்கொள்ளப்படும் திவால் நடவடிக்கைகுறித்து புதிய விதிமுறைகள் விரைவில் வெளி யிடப்படும் என்றார்.

கடந்த பிப்ரவரி 12-ம்தேதி ஆர்பிஐ பிறப்பித்த வழிகாட்டுதலுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில் இனி வாராக் கடன் வசூலில் தேக்கம் ஏற்படும் என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்படும் என்ற ஆர்பிஐ கவர்னரின் அறிவிப்பு இந்த அச்சத்தை போக்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் ரிசர்வ் வங்கியின் அதிகாரங்கள் பறிபோனதாக அர்த்தமல்ல. ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரங்கள் எப்போதும் அதனிடமே இருக்கும். ஆனால் அதை சரியான வகையில் செயல்படுத்த வேண்டும் என்று தாஸ் குறிப்பிட்டார்.

மக்களவை சில அதிகாரங் களை ரிசர்வ் வங்கிக்கு அளித் துள்ளது. அதன் அடிப்படையில் விரைவில் புதிய வழிகாட்டுதல் ஏற்படுத்தப்படும் என்றார்.

ரிசர்வ் வங்கி எந்த அளவுக்கு நிதி ஆதாரத்தை இருப்பில் (ரிசர்வ்) வைத்துக் கொள்ளலாம் என்பதை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட பிமல் ஜலான் தலைமையிலான குழு விரைவில் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தாஸ் குறிப்பிட்டார்.

வங்கிகளுடன் ஆலோசனைரிசர்வ் வங்கி அளிக்கும் ரெபோ கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளிக்கும் வீட்டுக் கடன், வாகனக் கடன், சிறு வணிகக் கடனுக்கான வட்டியைக் குறைப்பது குறித்து வங்கிகளுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் சரிவு

ரிசர்வ் வங்கி வட்டிக் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியிட்ட போதிலும் மும்பை பங்குச் சந்தையில் 192 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 38,684 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையிலும் 46 புள்ளிகள் வரை சரிந்ததில் குறியீட்டெண் 11,598 புள்ளிகளாக நிலை கொண்டிருந்தது.

டிசிஎஸ் பங்கு மிக அதிக பட்சமாக 3.12 சதவீதம் வரை சரிந்தது. ஹெச்சிஎல் டெக், யெஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐவங்கி, இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், கோடக் வங்கி, லார்சன் அண்ட் டூப்ரோ ஆகிய நிறுவனப் பங்கு களும் சரிவிலிருந்து தப்ப வில்லை.

வாக்களிக்கலாம் வாங்க

‘காஞ்சனா 3’ உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close