[X] Close

துணை நிறுவனங்களை இணைக்கிறது ஃபோக்ஸ்வேகன்


  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 10:15 am
  • அ+ அ-

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது மூன்று இந்தியத் துணை நிறுவனங்களை ஒரே நிறுவனமாக இணைக்க முடிவு செய்துள்ளது. முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் இயங்கிவரும் ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஃபோக்ஸ்வேகன் குரூப் சேல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று துணை நிறுவனங்களையும் ஒன்றாக இணைக்க திட்டமிட்டுள்ளது.

‘இந்தியா 2.0’ ஸ்கோடா நிறுவனத்தினால் தொடங்கப்பட்டுள்ள ‘இந்தியா 2.0’ என்ற மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆட்டோமொபைல் சந்தையில் உள்ள தொழில் வாய்ப்புகளை ஒருங்கிணைந்து பயன்படுத்திக்கொள்ள முடியும் என ஃபோக்ஸ்வேகன் நம்புகிறது.

ஒருங்கிணைந்த செயல்பாடுஇந்நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் குர்பிரதாப் போபராய் கூறியதாவது, “இந்த இணைப்பு நடவடிக்கையின் மூலம் மூன்று நிறுவனங்களின் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகத் திறன்களை ஒன்றாக ஒருங்கிணைத்து ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் நிஜமான திறன் என்ன என்பதை இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு அடையாளம் காட்டவிருக்கிறோம்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close