[X] Close

2019-20 நிதி ஆண்டில் 7.2% வளர்ச்சி: ஏடிபி கணிப்பு


2019-20-7-2

  • kamadenu
  • Posted: 04 Apr, 2019 10:14 am
  • அ+ அ-

2019-20-ம் நிதி ஆண்டில் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்குமென ஆசிய மேம்பாட்டு வங்கி(ஏடிபி) கணித்துள்ளது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது தொடங்கியுள்ள புதிய நிதி ஆண்டில் 7.6 சதவீதமாக இருக்கலாம் என முன்பு கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஆசிய மேம்பாட்டு வங்கியின் கணிப்பு இந்திய ஜிடிபி வளர்ச்சி முன்பு கணிக்கப்பட்டதைக் காட்டிலும் 40 அடிப்படை புள்ளிகள் குறைந்து 7.2 சதவீதமாக இருக்குமென கூறியுள்ளது. இந்தியாவில் முதலீடுகளையும், தனிநபர் நுகர்வையும் அதிகரிக்கும் வகையிலான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளதால் இந்தியாவின் வளர்ச்சி கணிசமான வேகத்தில் தொடரும் என்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி குறிப்பிட்டுள்ளது.

ஆசிய மேம்பாட்டு வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் யசுயுகி சவதா கூறியதாவது, “இந்தியாவில் குடும்பங்களின் நுகர்வு அதிகரித்து வருகிறது. அதேசமயம் நிறுவனங்களின் அடிப்படைகளும் வலுவாக உள்ளன. இதனால் உலகில் வேகமாக வளரும் நாடாக இந்தியா தொடர்ந்து இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close