[X] Close

சர்வதேச வர்த்தக வளர்ச்சி சரியும்: உலக வர்த்தக அமைப்பு கணிப்பு


  • kamadenu
  • Posted: 03 Apr, 2019 18:17 pm
  • அ+ அ-

-,

சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக வர்த்தக வளர்ச்சி 2019-ம் ஆண்டில் கணிசமாகக் குறையும் என்று உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) கணித்துள்ளது. பொருளாதாரத்தில் நிலவும் ஸ்திரமற்ற நிலை காரணமாக வர்த்தக வளர்ச்சி சரியும் என்று சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த ஆண்டு சர்வதேச வர்த்தக வளர்ச்சி 3.7 சதவீத அளவுக்கு இருக்கும் என்று முன்னர் கணித்திருந்தது. ஆனால் தற்போது வெளியான திருத்திய மதிப்பீட்டின்படி வளர்ச்சி 2.6 சதவீதமாக சரியும் என்று குறிப்பிட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் எட்டப்பட்ட 3 சதவீத வளர்ச்சியைக் காட்டிலும் இது குறைவாகும்.

இன்றைய சூழலில் குறிப்பிடத்தக்க செய்திகள் ஏதும் கிடையாது. இதனால் ஆச்சரியமூட்டும் விஷயங்களுக்கு இடமில்லை. கடந்த 12 மாதங்களாக செய்தித் தாள் படிப்பவர்களின் மனோ நிலை இவ்விதமாக உள்ளதாக டபிள்யூடிஓ இயக்குநர் ஜெனரல் ராபர்டோ அஸ்வெடோ குறிப்பிட்டுஉள்ளார்.

டபிள்யூடிஓ கூட்டமைப்பில் உள்ள 164 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரமற்ற நிலை உலக பொருளாதாரத்தை பாதிக்கும் அம்சமாக உள்ளது. குறிப்பாக சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தக போர் இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வர்த்தகத்தில் நிலவும் முட்டுக்கட்டயை போக்க அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளிடையேயும் பேச்சு நடைபெற்று வருகிறது. ஆனால் இதில் எத்தகைய முடிவு எட்டப்படும் என்பதில் தெளிவற்ற சூழல் உள்ளது. இருபெரும் பொருளாதார வல்லரசுகள் இடையே நிலவும் வர்த்தக போரின் காரணமாக பல நாடுகள் பாதிப்படையும். எனவே இப்போது நிலவும் பதற்றமான சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசர அவசியமான ஒன்று என்றார்.

பிரெக்ஸிட் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கையில் வெளியேறும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. பிரக்ஸெட் சூழலானது சர்வதேச வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று டபிள்யூடிஓ அமைப்பின் பொருளாதார அறிஞர் கோல்மென் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினையில் இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. இறுதி முடிவு எட்டப்பட்ட பிறகே ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும். அப்போதுதான் சர்வதேச வர்த்தகத்தில் பிரெக்ஸிட் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அளவிட முடியும் என்று கோல்மென் குறிப்பிட்டார். -பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close