[X] Close

ஹட்சன் பசுவின் பால் அறிமுகம்


  • kamadenu
  • Posted: 03 Apr, 2019 18:18 pm
  • அ+ அ-

ஹட்சன் அக்ரோ புராடெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் புதிதாக ஹட்சன் பசுவின் பாலை அறிமுகம் செய்துள்ளது. பண்ணைகளில் வளர்க்கப்படும் பசுக்களின் பாலை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கிறது. பசும்பாலுக்கான தேவை மக்களிடையே அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சந்தைப் பிரிவு துணைத் தலைவர் பிரசன்ன வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

பண்ணைகளில் வளர்க்கப்படும் பசு மாடுகளின் பாலை தனியாக சேகரித்து அவற்றை குறிப்பிட்ட வெப்ப நிலையில் கொதிக்க வைத்து அதை குளிர்விப்பதன் மூலம் அதில் உள்ள பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன. இவ்விதம் பதப்படுத்துவதன் மூலம் பால் மேலும் தரம் மிக்கதாக ஆகிறது.

500 மி.லி. பாக்கெட்டுகளில் இது கிடைக்கும். விலை ரூ. 25 ஆகும். முதல் கட்டமாக சென்னை, வேலூர், திருச்சி, சேலம், பாண்டிச்சேரி உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கும். பின்னர் படிப்படியாக பிற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறினார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close