[X] Close

ஜிஎஸ்டி வசூல் ரூ.1.06 லட்சம் கோடி


1-06

  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 09:09 am
  • அ+ அ-

மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.06 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய மாதம் ரூ. 97,247 கோடி வசூலானதைக் காட்டிலும் இது அதிகமாகும்.

இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 20,353 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 27,520 கோடி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்ஜி ரூ.50,418 கோடி. செஸ் வரி ரூ. 8,286 கோடியாகும்.

பிப்ரவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் மூலம் ரிட்டர்ன் கோரப்பட்ட தொகை ரூ.75.95 லட்சம்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்து இப்போதுதான் முதல் முறையாக மிக அதிக அளவில் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. 2018 மார்ச் மாதத்தைவிட 15.6 சதவீதம் கூடுதலாகும். அப்போது வசூலான தொகை ரூ.92,167 கோடியாகும்.

2018-19-ம் நிதி ஆண்டில் மாதந்தோறும் சராசரியாக வசூலான ஜிஎஸ்டி முந்தைய நிதி ஆண்டைவிட 9.2 சதவீதம் அதிகமாகும். கடந்த சிலமாதங்களாக வருவாய் அதிகரித்ததைத் தொடர்ந்து வரி வசூலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

2018-19-ம் நிதி ஆண்டில் மொத்தம் வசூலான ஜிஎஸ்டி ரூ.11.47 லட்சம் கோடி.

2019-2020-ம் நிதி ஆண்டுக்கு ஜிஎஸ்டி வசூல் இலக்கு ரூ. 13.71 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. -பிடிஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close