[X] Close

ஓயோ நிறுவனத்தில் ஏர் பிஎன்பி முதலீடு


  • kamadenu
  • Posted: 02 Apr, 2019 09:08 am
  • அ+ அ-

இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனமான ஓயோவில் அமெரிக்க ஓட்டல் புக்கிங் நிறுவனமான ஏர் பிஎன்பி முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் ஓட்டல் புக்கிங் நிறுவனமாக வளர்ந்துகொண்டிருக்கும் ஓயோவில் அமெரிக்க நிறுவனமான ஏர் பிஎன்பி முதலீடு செய்ய உள்ளது. முதலீட்டு தொகை எவ்வளவு எனத் தெளிவாகத் தெரிவிக்கப்படாத நிலையில் தோராயமாக 100-200 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.690-1,380 கோடி ஆகும்.

ஏற்கெனவே ஓயோவில் கடந்த சில மாதங்களில் மட்டும் சாஃப்ட்பேங்க் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன. மிகச்சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட ஓயோ நிறுவனம் தற்போது இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தனது தொழிலை விரிவுபடுத்தி வருகிறது. சமீபத்தில் ஜப்பானிலும் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. ஏர் பிஎன்பி உடனான கூட்டுத் தொழில் ஒப்பந்தம் பல புதிய வாய்ப்புகளை ஓயோவுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். இதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close