[X] Close

பிளிப் கார்ட்டின் 60 சதவீத பங்குகளை வாங்க அமேசான் ஆர்வம்


amazon-offers-60-stake-flipkart

  • நெல்லை ஜெனா
  • Posted: 02 May, 2018 16:31 pm
  • அ+ அ-

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப் கார்ட்டின் 60 சதவீத பங்குகளை வாங்க, அமெரிக்காவின் முன்னணி ஆன்லைன் நிறுவனமான அமேசான் முன் வந்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தை பலப்படுத்திவருகிறது. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த பிளிப் கார்ட், ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்களுக்கு அமேசான் கடும் சவாலாக இருக்கிறது. தற்போது இந்நிறுவனம் 32,295 கோடி ரூபாய் வரை கடந்த ஆண்டு முதலீடு செய்துள்ளது. எலெட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்டவை மற்றுமின்றி பல சரக்கு உள்ளிட்டவற்றையும் விற்பனை செய்ய அமேசான் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமேசான் நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் வால்மார்ட் நிறுவனம் விளங்குகிறது. இந்தியாவில் அமேசானுக்கு போட்டியை ஏற்படுத்தி, அதன் வளர்ச்சியை தடுக்கும் வகையில் வால்மார்ட் நிறுவனம் அதற்கான செயல் திட்டங்களில் இறங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக இந்தியாவில் பிரபலமாக உள்ள முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப் கார்ட்டை வாங்க முயன்ற வருகிறது.

பிளிப் கார்ட் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை வாங்க அமேசான் முன் வந்துள்ளது. சுமார் 13,000 கோடி ரூபாய்க்கு விலை பேசியுள்ளது. ஆனால் இதுபற்றி பிளிப் கார்ட் தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை. ஏற்கெனவே பிளிப் கார்ட்டை விலைக்கு வாங்க, அமேசானின் போட்டி நிறுவனமான வால்மார்ட் ஆர்வம் காட்டி வருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும், பிளிப் கார்ட் பங்குகளை வாங்கும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

வரும் ஜூன் மாதத்திற்குள் பிளிப் கார்ட் பங்குகளை வாங்க வால்மார்ட் திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 60 சதவீத பங்குகளை வாங்க அமோசான் முன் வந்துள்ளதால், வால்மார்ட் நடவடிக்கைக்கு பின்னடைவு ஏற்படும் என தெரிகிறது. அதாவது, பிளிப் கார்ட்டை வாங்க வால்மார்ட் கூடுதல் தொகை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close