[X] Close

விமான சேவை நிறுவனங்களின் நிதி நிலைமைக்கு அரசு பொறுப்பாகாது விமான சேவைத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கருத்து


  • kamadenu
  • Posted: 01 Apr, 2019 07:01 am
  • அ+ அ-

விமான சேவை நிறுவனங்களின் நிதி நிலைமைக்கும், ஸ்திரமான தொழில் செயல்பாடுகளுக்கும் அவைதான் பொறுப்பு. நிறுவனங்களின் தினசரி செயல்பாடுகளில் அரசு தலையிட முடியாது என விமான சேவைத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், அதை மீட்க எஸ்பிஐ வங்கி தலைமையிலான கடன் நிறுவனங்கள் குழு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர், இயக்குநர் பதவிகளிலிருந்து நரேஷ் கோயல் விலகி உள்ளார். தற்போது, ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவுக்குப் புதிதாகத் தலைவரை நியமிக்கும் வேலைகள் நடந்துவருகின்றன. எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைவர் ஏ.கே.புர்வார் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஜெட் ஏர்வேஸ் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகவே விமான சேவைத் துறை பெரும் நெருக்கடியில் தான் இருக்கிறது. அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவும் நிதி நெருக்கடியில் உள்ளது. விமான ஓட்டிகளுக்கு சம்பள பாக்கி போன்ற பிரச்சினைகளைச் சந்திக்கிறது. பிற தனியார் நிறுவனங்களும் விமான சேவையில் லாபம் ஈட்டுவது என்பது சவாலாகவே உள்ளது. இந்நிலையில், விமான சேவைத் துறையின் நெருக்கடி நிலை குறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கருத்து கூறியுள்ளார். “விமான சேவை நிறுவனங்களின் நிதி நிலைக்கும், தொழில் செயல்பாடுகளுக்கும் அவைதான் பொறுப்பு. அவற்றின் அன்றாட நடவடிக்கைகளில் அரசு தலையிட முடியாது. ஆனால், அதேசமயம், துறையில் உருவாகும் சிக்கல்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை செவ்வனே செய்வோம்” என்றார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு தற்போது ரூ.8,500 கோடி கடன் உள்ளது. அன்றாட தொழில் நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்த உடனடியாக ரூ.4,500 கோடி நிதி தேவையாக உள்ளது. தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை எஸ்பிஐ வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அதன் நிதி சார்ந்த விஷயங்களைக் கையாள எஸ்பிஐ கேபிடல் நிறுவனத்தை ஆலோசகராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close